அரசியலில் ரஜினியை எதிர்க்க தயங்கமாட்டேன்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் நாளை திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று கமல்ஹாசன் சென்னையில் இருந்து ரயிலில் திருச்சி சென்றார்.
ரயில் பயணத்தின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ரயிலில் செல்கிறேன். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாலும் தகும். ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் அளவிற்கு தமிழர்களை தள்ளிவிடக் கூடாது என்பதே மத்திய அரசுக்கு எனது வேண்டுகோள்
அவசியம் ஏற்பட்டால் அரசியலில் ரஜினியை எதிர்க்கவும் தயங்கமாட்டேன். அந்த நிலை எனக்கு வரக்கூடாது என நினைக்கிறேன்' என கமல்ஹாசன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout