தேர்தலில் தோற்கவும் தயார்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Sunday,April 22 2018]
நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று சென்னை தி.நகரில் 'தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம், அடுத்து சுற்று' என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, தேர்தலில் தோல்வி அடையவும் தயார், ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: இன்றைய நிலையில் சாதி என்பது ஒரு பெரிய தொழுநோயாக அச்சுறுத்தி வருவதாக கமல் கூறினார். எனவே அடுத்த தலைமுறையினர்களை சாதி என்னும் கொடிய தொழுநோயில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் என்பது விளையாட்டு அல்ல என்றும், அதனால் தான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்பதில் கவனமாக இருப்பதாக கூறிய கமல், தனது சொந்த பணத்தில் கட்சியை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழர்கள் நினைத்தால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியும் என்று கூறிய கமல், ஒவ்வொரு தமிழர் மீது தலா ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.