பாஜகவில் இணைய தயார்: உதயநிதி அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவின் இளம் தலைவரக உருவாகி வரும் உதயநிதி ஸ்டாலின், பாஜக டுவிட்டர் பயனாளி ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் நீங்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாஜகவில் சேர தயார் என்று கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என வாரிசுகள் வந்து கொண்டிருப்பது போலவே திமுகவிலும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அரசியல் வாரிசுகளாக வந்து கொண்டிருக்கின்றனர் விரைவில் இன்பநிதியை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி கோடி கோடியாய் பணம் இருக்கும் திமுக டிரஸ்டிலும் உதயநிதிக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி, 'நான் திமுக டிரஸ்ட் பதவியில் இருப்பதாக நிரூபித்தால் பாஜகவில் இணைய தயார். எனக்கு அதைவிட கொடுமையான தண்டனை வேறு இருக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
If u can prove that I am a trustee in DMKs trust.. I will join BJP ??the worst punishment possible ! https://t.co/5RXWQkNYcC
— Udhay (@Udhaystalin) January 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments