யாருடனும் டேட்டிங் செல்ல தயார்: பிக்பாஸ் நடிகையின் அதிரடி பதில்!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன், ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அவர் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் பல சுவராசியமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது டேட்டிங் குறித்த ஒரு கேள்வியை அவரது ரசிகர் ஒருவர் எழுப்பினார்.

அவரது கேள்வியில் ’உங்களை விட ஏழு வயது குறைவான ஒரு நபருடன் டேட்டிங் செல்ல வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா’ என்று கேட்டதற்கு ’டேட்டிங் செல்ல வயது ஒரு தடை இல்லை என்றும் யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்ல தயார்’ என்றும் அவர் பதிலளித்துள்ளார். ரைசா வில்சனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.