அஜித்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி, இதற்கு முன்பும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். 'விக்ரம் வேதா', புறம்போக்கு, ஜிகர்தண்டா, இறைவி, 'செக்க சிவந்த வானம்', போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதியிடம் ரசிகர்கள், 'தல கூட நடி தல? என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கு விஜய்சேதுபதி, 'சான்ஸ் கொடுத்தா சந்தோஷம்' என்று கூறியுள்ளார். அவரது பதிலை கேட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
திரைத்துறையில் எந்தவித பின்னணியும் இன்றி தங்களது கடினமான உழைப்பின் மூலம் மட்டுமே மாஸ் நடிகர்களாக மாறியுள்ள அஜித், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் அந்த படம் தமிழ் சினிமாவின் மாஸ் படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Fans - தல கூட நடி தல?@VijaySethuOffl - சான்ஸ் குடுத்தா சந்தோசம் ??
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) December 8, 2018
At Malabar gold opening.#ViswasamThiruvizha pic.twitter.com/HVBEKvq5Id
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com