அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இல்லை: தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த 1998ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி ரஞ்சித் நடிப்பில் பாரதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ’மறுமலர்ச்சி’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 22 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

‘மறுமலர்ச்சி’ திரைப்படத்தை இயக்கிய பாரதியே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகவும் மம்முட்டியுடன் இது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘மறுமலர்ச்சி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த தங்கர்பச்சான் இரண்டாம் பாகத்திலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘மறுமலர்ச்சி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் தான் பணிபுரியவில்லை என்றும் அந்த அந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 13 நாட்களில் தங்கர்பச்சான் தனது அடுத்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பீச், பிங்க் கலர், சன் செட்: 'மாஸ்டர்' நாயகியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அமெரிக்காவின் மிக மிக மோசமான அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் விளாசல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

கொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்!

விபத்து காரணமாக காயமடைந்த தனது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக குடும்பமே வறுமையில் இருக்கும்

அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்ப்பட படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்!

கடந்த சில நாட்களாக அகில இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருபவர் கங்கனா ரணாவத். சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறிய அவர் மகாராஷ்டிரா அரசுக்கு

குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த மேலும் ஒரு பாஜக பிரபலம்: நன்றி தெரிவித்த குஷ்பு

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது