இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கின்றேன்: சன்னிலியோன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'கரண்ஜித் கவுர்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'இந்த படத்தில் நான் நடிக்கவில்லை' என்றும் 'நானாக வாழ்ந்துள்ளேன்' என்றும் சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சன்னிலியோன் என்றால் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அவர் ஒரு ஆபாச படங்களில் நடித்த நடிகை என்பதுதான் ஞாபகம் வரும். ஆனால் ஆபாச நடிகையாக இருந்தாலும் அவரது மென்மையான தாயுள்ளம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், வாடகைத்தாயின் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார். மேலும் ஏராளமான சமூக சேவைகளையும் அவர் சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
எனவே சன்னிலியோனின் திரையுலக, ஆபாச படவுலக வாழ்க்கை மட்டுமின்றி அவருடைய இன்னொரு பக்கமும் இந்த படத்தின் மூலம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
I'm not playing a role, I'm being myself. Here's a sneak peek into my life.
— Sunny Leone (@SunnyLeone) July 6, 2018
Watch the official trailer of Karenjit Kaur: The Untold Story of Sunny Leone.
Premieres 16th July on @ZEE5#KarenjitKaurOnZEE5 #ZEE5Originals pic.twitter.com/uGONFUtvgK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments