எனக்கு அரசியல் அறிவு இல்லை.. விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்: விஜய் டிவி பிரபலம்..!

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

விஜய் டிவி பிரபலம் ஒருவர் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் ’எனக்கு அரசியல் அறிவு இல்லை’ என்றும் ’எனவே விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி உட்பட மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் இன்னும் ஒரு சில மாதங்களில் தீவிரமாக அரசியல் களத்தில் குதிப்பார் என்பதும் முதல் மாநாடு உள்பட பல்வேறு கட்சி பணிகளை அவர் முன் நின்று நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து எந்த திரை உலக பிரபலங்களும் அவரது கட்சியில் இணைவதாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் டிவி பிரபலம் கேபிஒய் பாலா ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக வதந்தி ஒன்று உலாவி வருகிறது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன், மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள் எனது திருமணத்திற்கு பின்பும் தொடரும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.