விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சாமி 2'. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவின் புவனா கேரக்டரில் த்ரிஷாவே நடிக்க முதலில் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தன்னுடைய கேரக்டருக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் புவனா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அந்த படம் ஐஸ்வர்யாவுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'சாமி 2' படத்தில் நடிக்க எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. வேறு நடிகைகள் யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முன்வரவில்லை. எனவே படக்குழுவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கே விருப்பமின்றி அந்த படத்தில் நடித்தேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

மேலும் தான் என்றைக்குமே கமர்ஷியல் இயக்குனர்களின் சாய்ஸாக இருந்ததில்லை என்றும், அதேபோல் தனக்கு ஹீரோவுடன் பாட்டு பாடி காதலிக்கும் சராசரி ஹீரோயின் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

More News

விஜய்யின் 'மெர்சல்' பாணியில் சூர்யாவின் 'என்.ஜி.கே'

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதை

இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

வடிவேல் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிய சிம்புதேவன், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில்

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

17 வருடமாக இரண்டு கால்களை இழந்து இலவச மருத்துவம்! பெண் டாக்டரை கொண்டாடும் மக்கள்!

அனைத்து தொழில்களும் பணத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இந்த காலகட்டத்தில்,  கடந்த 17 வருடமாக இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மக்களுக்காக சேவை செய்து வருகிறார்...

கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!

நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது...