close
Choose your channels

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை: ஆனால்...: அரவிந்தசாமி

Thursday, April 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை: ஆனால்...: அரவிந்தசாமி

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரவிந்தசாமி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அரவிந்தசாமி இந்த விழாவில் பேசியபோது, 'நான் அரசியலுக்கு வரப்போவதில்லை, அரசியல் பேசப்போவதுமில்லை. அரசியல் முடிவுகள் சாதாரண மக்களை பாதித்தால், எனது கருத்தை தெரிவிப்பேன்' என்று கூறினார்.

மேலும் இப்போதெல்லாம் ஒரு படத்தில் நடிப்பதோ, ஒரு படத்தை தயாரிப்பதோ பெரிய விஷயமாக தெரியவில்லை. தயாரித்து முடித்த படத்தை ரிலீஸ் செய்வதுதான் பெரிய விஷயமாக உள்ளது. இந்த படத்தை வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சித்திக் அவர்களுக்கு நன்றி என்று அரவிந்தசாமி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment