ஐஸ்வர்யாவுடன் காதலா? மனம் திறக்கும் ஷாரிக்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறியவர் ஷாரிக். பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அவர் வெளியேறியதை எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் ஷாரிக் வெளியேற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா இடையே காதல் மலர்ந்ததாக சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அவ்வப்போது கூறி வந்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுடன் தனக்கு உள்ள உறவு குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் ஷாரிக் மனம் திறந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் நான்கு பேர்களிடம் மட்டும் தான் உடனே நெருங்கி பழகிவிட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா என்று கூறிய ஷாரிக், ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் நட்பு ரீதியான உறவே இருந்ததே தவிர, எந்த நேரத்தில் காதல் மலரவில்லை என்று தெரிவித்துள்ளார். மகத், யாஷிகா ஆகியோர்களிடையே இருந்த நட்புபோல் தான் ஐஸ்வர்யாவிடமும் தனக்கு இருந்ததாகவும், ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே காதல் என்ற செய்தி எதனால் பரவியது என்றே தனக்கு புரியவில்லை என்றும் ஷாரிக் கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களைவிட ஐஸ்வர்யாவை அதிகம் மிஸ் செய்வதை உணர்ந்தேன்' என்று ஷாரிக் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com