தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தில், பிரபல நடிகர் ஒருவர் தனுஷின் சகோதரராக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நான் ’இட்லி கடை’ படத்தில் நடிக்கவில்லை, என்று அந்த நடிகர் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் 'இட்லி கடை' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் அசோக் குமார் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளனர் என்றும், நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாகவும், அருண் விஜய் வில்லனாகவும், அசோக் குமார் தனுஷின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் அசோக் குமார் தனது சமூக வலைத்தளத்தில், தனுஷின் தீவிர ரசிகன் நான். அவரை மிகவும் நேசிக்கிறேன். எதிர்காலத்தில் அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் 'இட்லி கடை' படத்தில் நான் நடிக்கவில்லை, என தெரிவித்தார். இதனால், 'இட்லி கடை' படத்தில் தனுஷுடன் அசோக் குமார் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ரொமான்ஸ் பாடல்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்..!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி! என்ன காரணம்?

நடிகர்  கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மனுஷன் அங்க நிக்கிறாய்யா' மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபல சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.

பிரபல சமையற் கலைஞரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத் தலைவரும், குக் வித் கோமாளி சீசன் 5ன் ஜட்ஜ்யும், மெஹந்தி சர்கஸ், Penguin ஆகிய இரு படங்களில் நடித்துள்ள நடிகருமான...

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு.. விஜய் டிவி புகழ் சந்தித்த உச்ச நட்சத்திரம்..!

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திப்பது. அந்த தருணம் எனக்கு கிடைத்தது என்று விஜய் டிவி புகழ், தனது இன்ஸ்டாகிராம்

எல்லோரும் ரொம்ப நாளா கேட்டது இதுதான்: 2 வீடியோக்களை வெளியிட்ட மணிமேகலை..!

எல்லோரும் ரொம்ப நாளாக கேட்ட குக் அக்கா இவங்கதான் என்று மணிமேகலை இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.