முதல்வர் பதவியை நினைத்து கூட பார்த்ததில்லை: ரஜினிகாந்த் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசியவற்றின் முக்கிய தொகுப்புகள் இதோ:
* வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு.
* அனைவருக்கும் தெளிவு வரவேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு.
* முதலில் அரசியலுக்கு வருவதாக சொன்னது 2017-ல்தான்- அரசியலுக்கு வருவதாக நான் 2017-க்கு முன்பு கூறவே இல்லை.
* வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை கண்ணோட்டமாக தெரிவிக்கிறேன்.
* கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை. என் ரத்தத்திலேயே அது இல்லை. சட்டமன்றத்தில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை; எனக்கு அது செட்டும் ஆகாது.
* 60% சதவீதம் 50 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும்,
30-40% அனுபவம் வாய்ந்த வல்லுநர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் எங்கள் கட்சியில் வழங்கப்படும்.
* அரசியலில் தேவையானவர்களை மட்டுமே உடன் வைத்துக் கொள்ளத் திட்டம். அதேபோல் தேர்தலுக்குப் பிறகு அவசியமான பதவிகள் மட்டுமே என் கட்சியில் இருக்கும்.
* சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout