ரகசிய திருமணமா? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. விஜய்யின் 'சர்கார்' விஷாலின் 'சண்டக்கோழி 2' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வரலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் ஒருசில இணையதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திக்கு பதில் அளித்த வரலட்சுமி, 'எனக்கு நிச்சயதார்த்தமும் நடைபெறவில்லை, இப்போதைக்கு திருமணமும் இல்லை' என்று கூறியுள்ளார். மேலும் இந்த வதந்தியை பரப்பி வரும் வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு தனது நன்றி என்றும், தன்னை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற அவர்களது எண்ணம் ஈடேறாது என்றும், ஏனெனில் தான் ஒரு கடின உழைப்பாளி மற்றும் வேலையை நேசிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

சர்கார்', 'சண்டக்கோழி 2' படத்தை அடுத்து நீயா 2', 'மாரி 2', 'காட்டேரி', வெல்வெட் நகரம்', மற்றும் 'ஷக்தி' ஆகிய படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'உன்னை அறிந்தால்' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றையும் வரலட்சுமி நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சி: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

'குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சித்ததாக பிரபல நடிகை ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.

விஷாலின் 'சண்டக்கோழி 2' சென்சார் தகவல்கள்

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ள 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள்

'சர்கார்' ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

அடுத்தடுத்து இரண்டு புயல்கள்; தமிழகதில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் ஆகிய இரண்டு புயல்களால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும்,

புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்ற அபிராமி: காரணம் என்ன?

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த குன்றத்தூரை சேர்ந்த அபிராபி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.