நான் நிர்வாணமாக நடிக்க சினிமாவிற்கு வரவில்லை… பிரபல நடிகை காட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர் கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறல்ல… ஆனால் நிர்வாணமாகவோ, கவர்ச்சியைக் காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ராதிகா பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்துவருகிறார். சமீபத்தில் வெப் சீரியஸ்களிலும் ஆர்வம் காட்டிவருகிறார். தமிழில் இவர் “சித்திரம் பேசுதடி 2“, வெற்றிச்செல்வன்“, “ஆன் இன் ஆல் அழகுராஜா“ போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான “கபாலி“ திரைப்படத்தில் படத்தில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடிக்கும் இவர் ஒருசில திரைப்படங்களில் நிர்வாணமாகவும் நடித்திருந்தா. அதேபோல இவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த நடிகை ராதிகா ஆப்தே, , அண்மையில் இயக்குநர் ஒருவர் என்னை சந்தித்து, அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் என்னிடம் வருகிறீர்கள் எனக் கேட்டேன்.
அதற்கு அவர், நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளீர்கள், அதுமட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் தானே எனக் கேட்டார். எனவே என்னுடைய படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களாக? என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார்.
அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்று தவறல்ல. கதைக்குத் தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காக கண்டபடி கதைகளைக் கொண்டு வந்தால் எப்படி?
நிர்வாணமாகவோ கவர்ச்சியைக் காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன் என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. இவருடைய கருத்திற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments