நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: AAA புகார் குறித்து சிம்பு

  • IndiaGlitz, [Friday,December 01 2017]

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ரூ.2 கோடி அட்வான்ஸ் வாங்கிய சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராதது மட்டுமின்றி இயக்குனர் ஆதிக் நினைத்தபடி படமெடுக்க விடாமல் அவர் இஷ்டப்படி கதையை மாற்றியதாகவும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிம்பு இதுகுறித்து விளக்கமளிக்கையில், ''அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி முடிந்துவிட்டது. முடிந்துவிட்ட விவகாரம் குறித்து நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தில் நடித்த எனக்கு ரூ.3.5 கோடி சம்பள பாக்கி உள்ளது. அந்த பணத்தை நடிகர் சங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று ஏற்கனவே நான் புகார் கொடுத்துள்ளேன். மேலும் எனக்கு ரெட்கார்ட் போட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும்' என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்ட் போடுமா? அவ்வாறு போட்டால் அதை சிம்பு எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்