எனக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை: தமிழ் நடிகர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'பருத்திவீரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஒருசில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஒருசில நாட்களுக்கு முன் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தனக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், தற்போது பூரண குணமாகிவிட்டதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சரவணன் மேலும் கூறியதாவது: நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது. அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன் ஆனால் இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது...என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் சரவணன் கூறி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com