இன்னும் நான் 'லியோ' படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கலை.. பிரபல நடிகர் பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தனது காட்சியின் படப்பிடிப்பு இன்னும் படமாக்கப்படவே இல்லை என்று மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடந்தது என்பதும் இதையடுத்து தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் மன்சூர் அலிகான் ’என்னுடைய காட்சியின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை, தற்போது தான் என்னுடைய காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் என்னுடைய காட்சியின் படப்பிடிப்பு என்று சொல்லி இருந்தார்கள் என்று கூறினார்.

மேலும் தேவா படத்திற்கு பிறகு விஜய் உடன் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிக்கின்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடன் நான் நடிப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறியுள்ளார்

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

கேமிராமேனிடம் கோபமாக நடந்து கொண்ட காவ்யா மாறன்.. என்ன நடந்தது பஞ்சாப்-ஐதராபாத் போட்டியில்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 14வது போட்டியாக பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இது டப்பிங்கா? இல்ல ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பா? அருண் விஜய்யின் ஆக்ரோஷமான வீடியோ..!

அருண் விஜய் நடித்து முடித்துள்ள 'மிஷன் 1' என்ற திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி

அடுத்த லெவலுக்கு சென்ற அமீர் - பாவனி .. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி தற்போது இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத்தொடர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து 

பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர்  சிறப்பு திரையிடப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ்: வேற லெவல் அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணையும்