லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா? நடிகர் மாதவன் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ’ரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற ஷட்டர் காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் நினைவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதேபோல் லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ திரைப்படத்திலும் மாதவன் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ராம் பொத்திநேனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவர் நடிகர் மாதவன் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தன
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். இயக்குனர் லிங்குசாமி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவர் ஒரு அருமையான இயக்குனர் மட்டுமின்றி அன்பான மனிதரும் கூட என்று கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது அடுத்த் திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலில் உண்மை இல்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து லிங்குசாமி படத்தில் மாதவன் வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Would so love to work with @dirlingusamy and recreate the magic cause he is such a wonderful, loving man too… unfortunately no truth in the news doing the rounds recently, of us doing a telugu film together with en as an antagonist ❤️❤️❤️??????
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments