வித்யாபாலனுடன் புகைப்படம்: அஜித்தை குற்றஞ்சாட்டும் ஜிப்ரான்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான், அஜித்தை சந்தித்தார் என்றும், விரைவில் நாம் ஒன்றாக சேர்ந்து பணிபுரிவோம் என்று அஜித், ஜிப்ரானிடம் கூறினார் என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் இருந்த வித்யாபாலனுடனும் ஜிப்ராம் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தை சற்றுமுன் தனது சமூகவலைத்தளத்தில் ஜிப்ரான் பதிவு செய்துள்ளார்.
வித்யாபாலனுடன் எடுத்த இந்த புகைப்படத்திற்கு என்னால் போஸ் கொடுக்கவே முடியவில்லை. காரணம் கேமிராவுக்கு பின்னால் இருந்த அஜித்தை நான் கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தது தான் என்று செல்லமான குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வித்யாபாலன் குறித்து அவர் குறிப்பிடும்போது, 'இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகைகளில் ஒருவர்' என புகழாராம் சூட்டினார்.
Yes its @vidya_balan , one of the finest actress in Indian Cinema.
— Ghibran (@GhibranOfficial) April 3, 2019
I'm not able to pose for this pic, since my eyes are seeing the man behind the camera #ThalaAjith Sir ??.
Thank you #AjithKumar sir for the pic pic.twitter.com/aLcb3FTXgz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments