இனிமேல் நான் சிங்கிள் இல்லை.. காதலை உறுதி செய்த 'விக்ரம்' பட நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஜெயரான் மகனும், கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ’விக்ரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான காளிதாஸ் ஜெயராமன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இனி நான் சிங்கிள் இல்லை’ எனக் கூறி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
’மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன். இதனை அடுத்து அவர் ’புத்தம் புது காலை’ ’பாவ கதைகள்’ ’ஒரு பக்க கதை’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் ’விக்ரம்’ படத்தில் சூப்பர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது காதலி பிரபல பாடல் அழகி தாரணி காளிங்கராயர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருவரும் இணைந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று தனது காதலை உறுதி செய்த காளிதாஸ் ஜெயராமன், ‘இனி நான் சிங்கிள் இல்லை’ என கூறி இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த நட்சத்திர காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments