நான் பான் - இந்திய நடிகன் இல்லை.. விஜய்சேதுபதி கூறியது ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஒரு நிஜமான பான் - இந்திய நடிகர் என்று ரசிகர்கள் கூறும் நிலையில் தான் பான் - இந்திய நடிகர் இல்லை என விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் படங்களில் மட்டுமின்றி பல தென்னிந்திய படங்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’அகதா’ என்ற கன்னட திரைப்படத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடித்த விஜய் சேதுபதி, ‘உப்பென்னா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் என்பதும் அதனை அடுத்து ’19 (1) ஏ’ என்ற மலையாள படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ’மைக்கேல்’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் ரிலீசானது என்பதும் தற்போது அவர் ’மேரி கிறிஸ்மஸ்’ ’மும்பைகார்’, ‘ஜவான்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி விரைவில் வெளியாக கூடிய ’ஃபார்சி’ என்ற வெப் தொடரில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு மொழியில் நடித்து அந்த படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் நடிகர்களே தங்களை பான் - இந்திய நடிகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் நிஜமாகவே ஐந்து மொழிகளில் தனித்தனியாக நடித்து வரும் விஜய் சேதுபதியை பான் - இந்திய நடிகர் என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஜய்சேதுபதி, ‘நான் பான் - இந்திய நடிகர் இல்லை, நான் ஒரு நடிகர், அவ்வளவு தான், பான் - இந்திய நடிகர் என்பது எனக்கு வசதியாக இல்லை, சில சமயங்களில் அது அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே நான் ஒரு நடிகன், அதற்கு மேல் எனக்கு வேறு எந்த முத்திரையும் குத்த வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.