அந்த படத்திற்கு நான் இசையமைக்கவில்லை.. வதந்திகள் பரப்ப வேண்டாம்.. ஆனால்.. ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் ’அந்த படத்திற்கு நான் இசையமைக்கவில்லை என்றும் தயவுசெய்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தின் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் ’டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க போகிறார் என்று கூறப்பட்டது. இந்த தகவல் பல இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் நிலையில் இது குறித்த ட்வீட் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த படத்தில் நான் இசையமைக்கப் போவதாக பரவி வரும் தகவல்கள் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் திறமையான நடிகரான துருவ் விக்ரம் மற்றும் அவருடைய குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிப்பில், கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Not true ..kindly don’t spread rumours😊
— A.R.Rahman (@arrahman) August 19, 2023
I wish the talented,charming Dhruv and the whole team an amazing success! https://t.co/hUF5JNy3dg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments