நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது என்ற உறுதியுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டை மீட்பது மட்டும் இந்த போராட்டத்தின் நோக்கம் அல்ல, பீட்டாவை நாட்டை விட்டே துரத்துவதற்கும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பீட்டாவின் உறுப்பினர் என்றும் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பல நடிகர், நடிகைகள் பீட்டாவில் உறுப்பினர் ஆனதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பீட்டா அமைப்பினர் உறுப்பினர் அல்ல என்றும், ஜல்லிக்கட்டுக்கு நான் முழு ஆதரவு அளிக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். செளந்தர்யாவின் இந்த விளக்கத்தை அடுத்து அவர் குறித்து வெளிவந்த வதந்திக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
Clarifying to those who think I'm a member of PETA , it is false. I am not a member of PETA and I support #Jallikattu entirely.
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 19, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments