நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது என்ற உறுதியுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டை மீட்பது மட்டும் இந்த போராட்டத்தின் நோக்கம் அல்ல, பீட்டாவை நாட்டை விட்டே துரத்துவதற்கும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பீட்டாவின் உறுப்பினர் என்றும் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பல நடிகர், நடிகைகள் பீட்டாவில் உறுப்பினர் ஆனதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பீட்டா அமைப்பினர் உறுப்பினர் அல்ல என்றும், ஜல்லிக்கட்டுக்கு நான் முழு ஆதரவு அளிக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். செளந்தர்யாவின் இந்த விளக்கத்தை அடுத்து அவர் குறித்து வெளிவந்த வதந்திக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை...

ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்...

நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருபக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு நாட்களாக போராடி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று ஒருநாள் மெளன போராட்டம் நடத்துவதாக அறிவித்தது...

ஊடகங்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன அறப்போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஊடகங்களில் இருந்து திசை திருப்பும் வகையில் உள்ளதாக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்...

ரயில் மறியல் செய்யும் மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் அன்பு எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ங்காநல்லூர், சென்னை மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது.