கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதுரை சென்றார். மதுரையில் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். நாளைய கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது
இந்த நிலையில் புதியதாக அரசியலுக்கு வருபவர்கள் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது' என்று பேசினார். நாளை கட்சி தொடங்கவிருக்கும் கமல்ஹாசனை குறித்தே ஸ்டாலின் இந்த கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டாலின் அவர்களின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'நான் பூ அல்ல, விதை, என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்வேன்' என்று கூறியுள்ளார்.
கட்சி தொடங்கும் முன்பே எதிர்க்கட்சி தலைவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசனின் சாதுர்யத்தை அரசியல் நோக்கர்கள் ஆச்சரியத்துடன் உற்று நோக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments