கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதுரை சென்றார். மதுரையில் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். நாளைய கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது

இந்த நிலையில் புதியதாக அரசியலுக்கு வருபவர்கள் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது' என்று பேசினார். நாளை கட்சி தொடங்கவிருக்கும் கமல்ஹாசனை குறித்தே ஸ்டாலின் இந்த கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டாலின் அவர்களின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'நான் பூ அல்ல, விதை, என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்வேன்' என்று கூறியுள்ளார்.

கட்சி தொடங்கும் முன்பே எதிர்க்கட்சி தலைவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசனின் சாதுர்யத்தை அரசியல் நோக்கர்கள் ஆச்சரியத்துடன் உற்று நோக்கி வருகின்றனர்.

More News

ரஜினியின் 'காலா' படத்தில் பாடும் வாய்ப்பை பெற்ற பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரியா வாரியர் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு

மலையாள நடிகை பிரியாவாரியர் ஒரே ஒரு கண்சிமிட்டலின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானார். கூகுள் தேடலில் முன்னணி நடிகைகளான சன்னிலியோனை முந்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வருக வருக புது யுகம் படைக்க: முதல் மாநாட்டுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை முதல் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளார். மதுரையில் நாளை கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவித்துவிட்டு தனது கட்சியின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார்.

கமல்ஹாசன் - சீமான் திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் தனது நெருங்கிய நண்பர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

அரபிக்கடலில் மிதந்ததா உபேர் கார்? ஃபேஸ்புக் பதிவு ஏற்படுத்திய பரபரப்பு

தனியார் வாடகைக்கார் நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே தங்களது சேவையை செய்துவருகின்றனர். நாம் புக் செய்த கார் எப்போது நம்மை வந்தடையும் என்பது உள்பட பல தகவல்களை கூகுள் மேப்