பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை: தமிழ் நடிகை விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பது தவறானது என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

குறிப்பாக விஜய் டிவி பிரியங்கா உள்பட ஒருசிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக என்னுடைய பெயர் அடிபட்டு வருகிறது. நான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எனவே அந்த பட்டியலில் இருந்து என்னுடைய பெயரை நீக்கி விடவும் என்று அவர் கூறியுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின்போதும் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்வதாக கூறப்பட்ட போதும் இதே போன்ற விளக்கத்தை அவர் அளிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவியது எப்படி?

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

UPயில் மர்மக்காய்ச்சல்… உயிரிழப்பு 50ஐ தாண்டிய அவலம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மீண்டும் இணைகிறதா 'அண்ணாத்த' கூட்டணி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்