சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன்: அரவிந்தசாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து கோலிவுட் திரையுலகினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தபோதிலும் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஒரு இறுதி முடிவு ஏற்பட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலைநிறுத்தம் நீண்ட நாட்களாக தொடர்ந்து வருவதால் சோர்வடைந்து வருவதாக பிரபல நடிகர் அரவிந்தசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: மிக நீண்ட சினிமா வேலைநிறுத்தம் காரணமாக சோர்வடைந்து வருகிறேன். மீண்டும் படப்பிடிப்புக்கு விரைவில் செல்ல வேண்டும். இந்த போராட்டத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வகையான முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் அனைவரும் விரைவில் பணிக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout