நான் முதலில் மனிதன். அப்புறம்தான் 'இந்தியன்'. கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சமூக கருத்துக்களை அதிகம் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், காவல்துறையின் வன்முறைக்கு அவர் தெரிவித்த கண்டனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நிர்வாண நிலையில் பாழும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். நந்தினி விஷயத்தில் கட்டாயம் நீதி வேண்டும். காவி, காதி, பச்சை, வெள்ளை, சிகப்பு அல்லது கருப்பு ஒரு விஷயமே இல்லை. யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கிரிமினல் குற்றங்களுக்கு கடவுளை காரணம் காட்டக்கூடாது. நான் முதலில் மனிதன், இரண்டாவது தான் இந்தியன் என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Justice4Nandhini a must. Kaavi(saffron) khadigreenwhite red or black does'nt matter. God is no reason for crime .. I am human 1st Indian 2nd
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments