நான் முதலில் மனிதன். அப்புறம்தான் 'இந்தியன்'. கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,February 04 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சமூக கருத்துக்களை அதிகம் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், காவல்துறையின் வன்முறைக்கு அவர் தெரிவித்த கண்டனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நிர்வாண நிலையில் பாழும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். நந்தினி விஷயத்தில் கட்டாயம் நீதி வேண்டும். காவி, காதி, பச்சை, வெள்ளை, சிகப்பு அல்லது கருப்பு ஒரு விஷயமே இல்லை. யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கிரிமினல் குற்றங்களுக்கு கடவுளை காரணம் காட்டக்கூடாது. நான் முதலில் மனிதன், இரண்டாவது தான் இந்தியன் என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இது கே.வி.ஆனந்தின் மற்றொரு 'கோ'வம். கபிலன் வைரமுத்து

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்'; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பீட்டாவுக்கு விஜயகாந்தின் சாட்டையடி கேள்வி.

சென்னை எண்ணூரில் இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீனவர்கள் மட்டுமின்றி மீன் உள்பட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

அஜித் ஃபர்ஸ்ட்லுக் கிராபிக்ஸா? சிறுத்தை சிவா விளக்கம்

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

எண்ணூர் அருகே மோதிய கப்பல்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை அருகே உள்ள எண்ணூரில் கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடல்நீருடன் கலந்தது

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்த கமல்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த விஷாலை, சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை சஸ்பெண்டை ரத்து செய்த செய்தியையும், அதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செய்தியையும் சற்று முன்னர் பார்த்தோம்