மாநாடு வெற்றியை மனதார பாராட்டிய பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் மோகன்லால் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் “மாநாடு“ திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் “மாநாடு“ வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக அவர் தெரிவித்து இருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் “மாநாடு“ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் மாநாடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மோகன்லால் தமிழ் திரைப்படமான “மாநாடு“ படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது எனக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். இதுகுறித்த வீடியோவை “மாநாடு“ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Mollywood Superstar @Mohanlal sir speaks about the Blockbuster Success of #Maanaadu in his latest interview ?? #MaanaaduBlockbuster #SilambarasanTR #Mohanlal @SilambarasanTR_ @kalyanipriyan @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi @Cinemainmygenes @U1Records pic.twitter.com/cBn8Ck3BMy
— Silambarasan TR 360° (@STR_360) December 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com