இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை - நடிகை ஸ்ருதிஹாசன் !!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.

ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றி பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.

இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

'இந்தியன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது உருவாக்கத்தில் சமீபத்தில் வெளியான சுயாதீன இசை ஆல்பம் இனிமேல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் 2 ஹீரோயின்கள்.. 3 வில்லன்கள்.. மாஸ் தகவல்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23'படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில்

'லியோ'வுக்கு மீண்டும் தமிழில் சஞ்சய் தத்.. மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகிறாரா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ'  திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய்யின் அப்பாவாகவும் அதே நேரத்தில் வில்லனாகவும் நடித்திருந்த

'கில்லி'யை அடுத்து சொல்லி அடிக்கும் இன்னொரு விஜய் படம்.. ரீரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் ரீரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவியா படம் உள்பட 3 தமிழ் படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

பா ரஞ்சித்தின் கேங்ஸ்டர் படத்தில் மூன்று ஹீரோக்கள்.. டைட்டிலே இவ்வளவு ஆக்ரோஷமா இருக்குதே..!

பா ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.