பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயக்கமில்லை: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி கேரள, ஆந்திர, கர்நாடக, டெல்லி மற்றும் மேற்குவங்க முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வருவதால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்றே கருதப்பட்டது. மேலும் அவர் காவி எதிர்ப்பு குறித்து பலமுறை பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கமில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவுடனும் கமல்ஹாசன் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு இதுவரை அரசியல் தலைவர்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதே போன்ற ஒரு கருத்தை ரஜினி கூறியிருந்தால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் இந்நேரம் வெளிவந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பரியேறும் பெருமாள்' படத்திற்கு மு.க.ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில்

தொடர் மழை எதிரொலி: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழையும், விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் நல்ல மழை பெய்துள்ளது.

விஜய் கூறிய 'நண்பி' தமிழ் சொல்லா? நெட்டிசன்கள் விவாதம்

விஜய் வாயை திறந்து என்ன கூறினாலும் அது சர்ச்சைக்குரியதாக மாறிவிடும் நிலை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது

'பேட்ட' படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? பகத் பாசில் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தில் அவ்வப்போது பிரபலங்கள் இணைந்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். லேட்டஸ்ட்டாக பிரபல நடிகர் சசிகுமார் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

காதலருடன் '96' படம் பார்த்த லேடி சூப்பர் ஸ்டார்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.