'மங்காத்தா 2' இயக்க பயமாக இருக்கின்றது! வெங்கட்பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் 50வது படமான 'மங்காத்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை வசூல் செய்தது. தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் தொடர்ந்து வருவதால் 'மங்காத்தா 2' படத்தை அஜித் நடிப்பில் இயக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய 'மங்காத்தா' இயக்குனர் வெங்கட்பிரபு, 'மங்காத்தா 2' படத்தை நான் இயக்குவேனா? என்று எனக்கு தெரியவில்லை. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா? என்ற பயம் எனக்கு உள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், மீண்டும் அஜித் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவேன். அது மங்காத்தா 2' படமா? அல்லது புதிய கதையா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments