நானும் தமிழ் பொறுக்கிதான். ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன். கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]


கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலக நாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழர்களை பொறுக்கி என கூறிய பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியம் சுவாமிக்கு நேற்று நடந்த விழா ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான இணையதள துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், 'யாரோ ஒருவர் தமிழர்கள் எல்லாம் பொறுக்கிகள் என பேசியிருக்கிறார். ஆமாம். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கே சென்று பொறுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் கண்டிப்பாக டெல்லி சென்று பொறுக்க மாட்டேன். என்னடா இவன் திடீரென அரசியல் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல. தன்மானம்' என்று கூறினார்.

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து அவர் பேசியபோது, 'ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல், கலெக்டராகவோ, இன்ஜினியராகவோ இருந்திருந்தால் அலங்காநல்லூர் கிராமத்தில் இந்நேரம் நின்றிருப்பேன்' என்று கூறினார்.

More News

பீட்டா ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் பதிலடி

நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்...

மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி. சென்னை திரும்புகிறார் முதல்வர்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் ஜல்லிக்கட்டு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர் சென்னை திரும்புகிறார்...

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசை வலியுறுத்தினார்...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது...

சூர்யாவின் 'சி 3' படத்தின் ரன்னிங் டைம்

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது...