நான் ஒரு தமிழ் கலாச்சார பொண்ணு: பியர் குடித்து கொண்டே பதில் கூறிய மீராமிதுன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன் சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடாத நாளே இல்லை என்று கூறலாம். குறிப்பாக சேரன், வனிதா, ரேஷ்மா, அபிராமி என தினசரி ஒரு நபரை குறிவைத்து அவர்களுடன் சண்டை போட்டு முடிந்தவரை மற்றவர்களின் இமேஜை டேமேஜ் செய்ய முயன்ற மீராமிதுன் நல்லவேளையாக விரைவில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் மற்ற போட்டியாளர்கள் நிம்மதியுடன் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மீராவின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மீராமிதுன் நண்பர்களுடன் பியர் குடித்து கொண்டே சமூக வலைத்தள பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். ஒரு தமிழ்ப்பெண் பியர் குடிக்கலாமா? என்ற கேள்விக்கு 'என்னப்பா எதுக்கு எடுத்தாலும் தமிழ்ப்பொண்ணுன்னு சொல்றிங்க. நான் தமிழ்ப்பொண்ணுதான், தமிழ் கலாச்சாரத்தை மதிப்பவர்தான். பியர் பார்லி தண்ணீர்தான். இதை குடிச்சா ஒண்ணும் தப்பில்லை' என்றும் பியர் குடிப்பது உடலுக்கு நல்லது, பியர் குடித்தால் தொப்பை வரும் என்று கூறுவதில் உண்மை இல்லை, நான் யோகா, தியானம் செய்வதால் என்னுடைய உடல் எப்போதும்போல் இருக்கும் என்றும் தெரிவித்தார்
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஏன் எல்லோரிடமும் சண்டை போட்டீர்கள்? என்ற கேள்விக்கு, 'நான் யாரிடமும் சண்டை போடவில்லை, எல்லோரும்தான் என்னிடம் சண்டை போட்டார்கள். நான் அமைதியாகத்தான் இருந்தேன்' என்று கூறினார். மேலும் 'சரவணன் ரொம்ப நல்லவர் என்றும் வெளிப்படையாக உண்மையை பேசுபவர் என்றும் கூறிய மீரா, 'சாக்சி ரொம்ப எமோஷனலாகவும், சென்சிட்டிவ்வாகவும் இருப்பதால் புரிந்து கொள்ளாமல் சில பிரச்சனைகள் செய்வதாக மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு பிடிக்காதவர் சேரன் என்றும் அவர் ரொம்ப நடிப்பதாகவும், அவரை தவிர அனைவரும் நல்லவர் என்றும் மீரா கூறியுள்ளார். மேலும் தர்ஷனை தான் லவ் பண்ணவில்லை என்றும் லவ் என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது என்றும், அந்த உணர்வு தனக்கு இன்னும் வந்ததில்லை என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments