ஆன்ட்டி பிகிலி' நான் தான், அப்ப பிகிலி யாரு? பிரபல நடிகர் டுவிட்

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிகிலி என்றால் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வைரலானது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் திடீரென ’ஆன்ட்டி பிகிலி’ என்றால் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டதால் திரையுலக பிரபலங்கள் கூட யார் இந்த பிகிலி, ’ஆன்ட்டி பிகிலி’? என்ற கேள்வியை எழுப்பினர்.

பிகிலி என்பது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் தான் என்று அனைவருக்கும் புரிந்தாலும் யார் நடித்த படம்? என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது. ஒரு சிலர் இது விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்றும் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் என்றும் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பிகிலி மற்றும் ’ஆன்ட்டி பிகிலி’ ஆகிய இரண்டுமே தன்னுடைய படத்தில் வரும் கேரக்டர்கள் தான் என்று பதிவு செய்து கடந்த இரண்டு நாட்களாக நிலவிவந்த புதிருக்கு விடை அளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் ’ஆன்ட்டி பிகிலி’ என்ற கேரக்டரில் தான் நடித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அப்ப பிகிலி என்றால் யார் என்ற கேள்வியை அவரே எழுப்பியுள்ளார். விரைவில் பிகிலி யார் என்பதை அவரே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.