நான் ஐஸ்வர்யாவின் பினாமி.. கைதான ஈஸ்வரி கூறிய திடுக் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடியதாக கைது செய்யப்பட்ட அவரது வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர், தான் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமீபத்தில் நகைகள் திருடு போனது என்பதும் இது குறித்து அவர் தேனாம்பேட்டை காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில் அவரிடம் பணி புரியும் ஈஸ்வரி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியவர்களிடமிருந்து 100 சவரன் நகை, 95 லட்சம் மதிப்புள்ள நில பத்திரம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈஸ்வரியின் கணவர் ’இவ்வளவு பணம் ஏது’ என்று கேட்டபோது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு, நகைகள் வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு தான் இது நமது வீடு உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான வீடு என்றும் தனது கணவரிடம் பொய் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் திருடிய பணத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைத்தது, கணவருக்கு காய்கறி மற்றும் மளிகை கடை வைத்து கொடுத்தது உள்பட பல செலவுகளை ஈஸ்வரி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 வருடமாக வேலை பார்க்கும் ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி உள்ளதாகவும் அதுமட்டுமின்றி இவர் தான் தனுஷ் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை எடுத்து செல்வார் என்றும், அதுவும் தனது கணவரின் காய்கறி கடையில் இருந்து தான் எடுத்துச் செல்வார் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் மட்டுமின்றி தனுஷ் வீட்டிலும் இவர் திருடி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com