நான் முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்தால் ஆட்சி மேலும் வலுப்பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போதுதான் ஆட்சிக்கு மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் மற்றும் மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக எதிர்க்கும் தினகரன் அணியின் முக்கிய தலைவரான நாஞ்சில் சம்பத் இதுகுறித்து கூறியபோது, 'இந்த ஆட்சி 123 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைத்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது எங்கள் ஆட்சி என்றும், இந்த ஆட்சியை நாங்கள் எந்த காரணத்தை கொண்டும் கலைக்க மாட்டோம் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்
முதல்வரை மட்டுமே மாற்ற வேண்டும் என்பது தங்கள் கோரிக்கை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நிருபர்கள் யார் புதிய முதல்வராக பதவியேற்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''அது நானாக கூட இருக்கலாம்' என்று கூறினார். தினகரனின் அறுவை சிகிச்சை ஆரம்பமாகிவிட்டது என்றும் இனி தினந்தோறும் பத்திரிகையாளர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.