கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் நிரூபிக்கப்படாத ஒன்று!!! இறுதி முடிவு வெளிட்ட WHO!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்தைப் பற்றி விஞ்ஞான உலகம் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோகுயின் சிறந்த பலனைக் கொடுக்கும் எனவும் நோய்ப் பரவலைத் தடுக்க இது உதவும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். மலேரியாவுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் இந்த மருந்தை அதிகமாக மருத்துவர்கள் மட்டுமே பாதுகாப்பு அடிப்படையில் பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாது இது நல்ல தடுப்பு மருந்தாகவும் கருதப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. பல்வேறு தரப்புகளில் இருந்து, கொரோனாவில் இருந்து இந்த மருந்து காப்பாற்றும் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோகுயின் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பலனுள்ளதாக இருக்கிறது என்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் கண்டறியப்பட வில்லை என்று WHO வின் அவசரகால குழுவின் இயக்குநர் மைக் ரயான் தெரிவித்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு இந்த மருந்தை பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர கொரோனா சிகிச்சைக்கு Remdesivir நல்ல பலனைக் கொடுப்பதாக அமெரிக்கா சிகாகோவின் Gailed பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்நாட்டு சுகாதார நிறுவனத்தோடு இணைந்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப் பட்டதாகவும் சிகிச்சையில் நல்ல முறையில் அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டது. அதோடு இந்த மருந்தின் பயன்பாட்டினால் கொரோனா நோயாளிகள் மருத்துவ மனைகளில் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கை 31 விழுக்காடு குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்படி நேர்மறையான செய்திகளை வெளிவந்து கொண்டே இருந்ததைத் தொடர்ந்து நேற்று கொரோனா சிகிச்சையில் Remdesivir குறைந்த இரத்தத் அழுத்ததை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் தெளிவு படுத்தி இருந்தனர்.
ஆக, கொரோனா சிகிச்சைக்கு என்று எந்த சிகிச்சை மருந்தையும் WHO இதுவரை பரிந்துரைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து Interferon a2b கொரோனா சிகிச்சைக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments