ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்!!! எச்சரிக்கும் ஐரோப்பிய மருந்து நிறுவனம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் இணைத்து கொரோனா மருந்தாக எடுத்துக்கொண்டால் மருத்துவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து உலக நாடுகளிடையே இந்த மருந்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
தற்போது குளோரோகுயின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இரண்டு மருந்துகளும் மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது இதயப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்துகளும் பரிந்துரைக்கப் படாத நிலையில் உலக நாடுகளில் பல மருந்துகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு பாதுகாப்பு நிறுவனமான FDA கூட கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிந்துரைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை, மற்ற மருந்துகளோடு சேர்த்து சாப்பிடுவதால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும், இது கடுமையான வலிப்புநோய் மற்றும் இதயப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்வற்றை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக உலக நாடுகளை இந்நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்காவிலும் இந்த மருந்தைக் குறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் ஏமாற்றமான முடிவுகளையே தெரிவித்து இருக்கின்றனர். ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் எடுத்துக்கொண்ட 368 கொரோனா நோயளிகளில் அதிகமான இறப்பு நிகழ்ந்திருக்கிறது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout