ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மரணத்தை ஏற்படுத்தும்!!! அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது ஆய்வு!!!
- IndiaGlitz, [Saturday,May 23 2020]
கொரோனா நோய் சிகிச்சைக்கு உரிய பாதுகாப்பான மருந்துகள் எதையும் விஞ்ஞானிகள் இதுவரை பரிந்துரைக்க வில்லை. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்போது நோயாளிகளை அதில் இருந்து மிட்பதற்காக Remdesivir, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், இன்டர்பிரான் A2b போன்ற மருந்துகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்காவின் FDA கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கடந்த மார்ச் 28 ஆம் தேதி அங்கீகரித்தது. மேலும் சீனா போன்ற 12 முக்கிய நாடுகளில் இந்த மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் இந்த மருந்தை கொரோனா நோய் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் திறனுடையது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதில் இருந்து இதை உலக நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டன.
கொரோனா சிகிச்சைக்கு இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினோடு சேர்த்து Macrolide, சில சமயங்களில் குளோரோகுயின், ஆந்த்ரோமைசின் போன்ற மருந்துகளும் பயன்படுததப் படுகிறது. இப்படி பயன்படுத்தும்போது சிகிச்சையில் குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளை தடுக்கவே இந்த மருந்துகள் பயன்படுத்தப் படுகிறது. கொரோனா நோய் பாதிக்கிற அனைவருக்கும் இந்த மருந்தைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் கூறப்பட்டது. நோய் பாதிப்பே இல்லாத நிலையில் பயன்படுத்துவதாலும் கடுமையான பக்க விளைவுகள் வரும் எனவும் தெளிவு படுத்தப் பட்டு இருந்தது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து முழுமையான பயனைத் தரவில்லை எனவும் கடுமையான மரணத்தை ஏற்படுத்தும் எனவும் The Lancet அறிவியல் ஆய்விதழில் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும்போது முடக்குவாதம் மற்றும் Auto Immune போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதோடு இது கடுமையான இருதய நச்சுநோய் மற்றும் Cardiac Injury யை ஏற்படுத்துவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆய்வுக்காக 6 கண்டங்களில் இருந்து 671 மருத்துவ மனைகளில் தரவுகள் சேகரிக்கப் பட்டதாகவும் அந்த நோயாளிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து 48 மணிநேர சோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
48 நேரத்திற்கு கொரோனா நோயாளிகளை 4 குழுக்களாக பிரித்து முறையே முதல் குழுவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மட்டும் கொடுக்கப்பட்டது. அடுத்த குழுவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்+ Macrolide, மூன்றாவது குழுவுக்கு குளோரோகுயின் மட்டும் நான்காவது குழுவுக்கு குளோரோகுயின்+ Macrolide கொடுக்கப் பட்டதாகவும் அந்த ஆய்விதழ் தெரிவிக்கிறது. அதில் எந்த குழுவுமே பாதுகாப்பான முறையில் கொரோனாவை குணப்படுத்த வில்லை எனவும் The Lancet ஆய்விதழ் தகவல் தெரிவிக்கிறது. மேலும் மரணம் போன்ற அபாயத்தை கொண்டிருப்பதாகவும் இருதய நச்சதிர்வு, Auto Immune, Cardiac Injury போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவும் ஆய்வறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.