உலகின் அதிகவேகமான மனித கால்குலேட்டர்… 20 வயதில் சாதனை படைத்த இந்திய இளைஞர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரைச் சேர்ந்த சகுந்தலா தேவி உலகின் அதிகவேக மனிதக் கால்குலேட்டராகச் செயல்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தார். அவரது சாதனையை தற்போது ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நீலகண்ட பானு பிராகாஷ் என்ற 20 வயது இளைஞர் முறியடித்து இருக்கிறார். லண்டனில் நடைபெற்ற மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்று உலகின் அதிகவே மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தை நீலகண்ட பானு தட்டிச்சென்றிருக்கிறார்.
லண்டனில் கடந்த 15 ஆம் தேதி மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்டில் மனக் கணக்கீட்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இந்தப் போட்டியில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, கிரீஸ், பிரான்ஸ், லெபனான் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ் என்ற இளைஞர் கலந்து கொண்டார். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் தங்கத்தையும் வென்றார். இதனால் உலகின் அதிகவே மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தைச் சொந்தமாக்கியிருக்கிறார். இதற்குமுன் பெங்களூரைச் சேர்ந்த சகுந்தலா தேவி செய்த கணக்கீட்டு வேகத்தை முறியடித்து இவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டில்லி பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றுவரும் இவர், மனதிற்குள்ளே விரைவான கணித கணக்கீடுகளை செய்து முடிக்கும் திறமைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 4 உலகச் சாதனைகள், 50 லிம்கா சாதனைகளையும் செய்திருக்கிறார். இவரது மூளை ஒரு கால்குலேட்டர் வேகத்தை விட விரைவாக கணக்கிடும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த சாதனைகளை முன்னதாக ஸ்காட் பிளான்ஸ்பர்க், சகுந்தலா தேவி போன்ற சில கணிதமேதைகள் மட்டுமே செய்திருக்கின்றனர்.தற்போது நீலகண்ட பானு பிரகாஷ் 20 வயதில் உலகக் கணிதமேதைகளின் சாதனையை முறியடித்து இருக்கிறார் என்பது இந்தியாவிற்கு பெருமையைத் தேடித்தரும் விதமாக அமைந்திருக்கிறது. எனவே பலரும் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout