139 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்: 25 வயது பெண்ணின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

25 வயது பெண் ஒருவர் தன்னை கடந்த சில ஆண்டுகளாக 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திடீரென காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தன்னை 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அரசியல்வாதிகளின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், மீடியா பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனு குறித்து 42 பக்கம் எப்.ஐ.ஆர் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் ஆனதாகவும் அதன் பின்னர் தனக்கு ஒரு சில வருடங்களில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பின்னர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களே 20 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்தார்.

மேலும் விவாகரத்துக்கு பின்னர் தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் அங்கும் தனக்கு பலரால் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் தனது உடம்பில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பதாகவும் பலமுறை தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 25 வயது பெண்ணின் திடுக்கிடும் இந்த புகார் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

முதல்முறையாக தளபதி விஜய்யுடன் பணிபுரிகிறார்களா இந்த இரட்டையர்கள்?

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்து வரும் அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் பல திரைப்படங்களின் பணிபுரிந்து வருகின்றனர்

வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்

'தெய்வமகள்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்

கறிக்குழம்பு மாதிரி ஜம்முன்னு இருக்கு உங்க கசாயம்: சென்னை சித்தவைத்தியருக்கு பாராட்டு தெரிவித்த சூரி

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலகமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற திணறி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வீரபாபு

'ரிகவர்' ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கும் இருக்கு: விஜய்சேதுபதி

தனக்குத்தானே யாருடைய உதவியுமின்றி 'ரிகவர்' ஆகும் தன்மை பூமியைப் போலவே மனிதனுக்கும் இருப்பதாக நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மிக உயரிய விருது அறிவிப்பு!

தமிழக விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது