பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
- IndiaGlitz, [Monday,April 02 2018]
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் ராதிகாரெட்டி. 36 வயதான இவர் நேற்றிரவு ஐதராபாத்தில் திடீரென தனது ஐந்தாவது மாடி வீட்டில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராதிகாரெட்டி தற்கொலை குறித்து விசாரணை செய்து வரும் ஐதராபாத் போலீசார் அவருடைய கைப்பையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனது மன அழுத்தமே காரணம் என்று எழுதியுள்ளார்.
மேலும் நேற்றிரவு 10.40 மணியளவில் வேலைமுடிந்து வீட்டிற்கு வந்த ராதிகாரெட்டி தனது வீட்டில் இருந்து குதித்து கீழே விழுந்ததாகவும், இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராதிகா ரெட்டி கடந்த ஆறு மாதங்களுக்குக் முன்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பதும் இவருக்கு 14 வயதில் மனநலம் குன்றிய மகன் ஒருவர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.