இதுவும் ஒரு பயிற்சி! மாணவிகள் மேலாடையை கழட்ட சொன்ன ஆசிரியர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவ மாணவிகளை, மேலாடையை கழட்ட சொல்லியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல நாடக கலைஞர், வினய் வர்மா. 'சுற்றத்தார் நாடகப்பள்ளி' ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளி காலை 6 : 30 மணி முதல் 9 :30 மணி வரை இயக்கி வருகிறது.
பல்வேறு மாணவர்கள் இந்த பள்ளியில் நாடக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்த நாடக பள்ளி ஆசிரியரான வினய் வர்மா, திடீர் என ஜன்னல், கதவுகளை, பூட்டி விட்டு மாணவ மாணவிகள் அனைவருடைய மேலாடையை, அகற்றுமாறு கூறியுள்ளார்.
மாணவர்கள் அனைவரும் தங்களுடைய மேலாடையை அவிழ்த்து விட்டு, வரிசையில் நின்றுள்ளார். வினய் வர்மாவிற்கு பயந்து, மாணவி ஒருவரும் மேலாடையை கழற்றியுள்ளார். ஆனால் இதைக் கேட்ட மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களால் இதை செய்ய முடியாது என கூறியதும், அவர்களை வெளியே போகும்படி கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஒருவர், தெலுங்கானா காவல்துறை பிரிவுகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் 'ஷீ டீம்' என்ற தனிப்பிரிவில் ஆசிரியர் வினய் வர்மா மீது புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள வினய் வர்மா, இந்த புகாரை கொடுத்த மாணவி, நாடகப் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் முதல் இதுபோன்ற பல புகார்களை தெரிவித்து வருகிறார். அவர் விருப்பப்பட்டு இந்த பள்ளியில் படிக்க வில்லை. தந்தைக்காக மட்டுமே சேர்ந்தார்.
நான் மாணவ மாணவிகளின், மேலாடையை கழட்டச் சொன்னது உண்மைதான். ஆனால் யாரையும் நிர்வாணமாக நிற்க சொல்லவில்லை இது படிப்பின் ஒரு பகுதி, உடலை எப்படி கருவியாக மாற்றுவது என கற்பிக்கும் பாடம் என தெரிவித்துள்ளார். எனினும் இவர் செய்ததற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout