பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தூக்கில் தொங்கிய 10ஆம் வகுப்பு மாணவன்
- IndiaGlitz, [Wednesday,April 03 2019]
பப்ஜி விளையாட்டால் பல இளைஞர்கள், சிறுவர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய பெற்றொரின் செல்போனில் பப்ஜி விளையாடியுள்ளார். மறுநாள் தேர்வு இருப்பதால் பப்ஜி விளையாட கூடாது என்றும், தேர்வுக்கு படிக்குமாறும் அந்த மாணவனின் தாய் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் தனது படுக்கையறையில் உள்பக்கம் தாள் போட்டு சீலிங் பேனில் தூக்கில் தொங்கியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அந்த மாணவன் பரிதாபமாக தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்., இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பப்ஜி விளையாட்டுக்கு உலகம் முழுவதும் பல இளைஞர்கள் அடிமையாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.