இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?
- IndiaGlitz, [Tuesday,March 14 2017]
மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்விக்கண்ணை திறக்கும் தெய்வங்களாக ஆசிர்யர்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் செய்யும் தவறு கல்வித்துறைக்கே களங்கம் ஏற்படுத்துகிறது.
ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் இண்டர்னல் தேர்வு எழுதவில்லை என்றும் மேலும் அந்த மாணவரின் வருகை பதிவு சரியில்லை என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்து பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை செய்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் திருத்த ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை முழுவதையும் அருகில் இருந்த மாணவரின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளங்களிலும், சமூகவலைதளங்களிலும் பதிவு செய்துள்ளார். வீடியோவின் முடிவில் அந்த தலைமை ஆசிரியை வீடியோ எடுப்பதை கண்டுபிடித்து அதை டெலிட் செய்யும்படி கூறுகிறார்.
நான்கு நிமிடங்கள் வரை ஓடும் இந்த வீடியோவில் அவர் பேசியதில் இருந்து கல்வித்துறையில் கீழிருது மேல் வரை எந்த அளவுக்கு ஊழல் ஒரு பெரிய ஊற்றாக பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்? என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. என்ன செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுவதை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள்