'பியார் பிரேமா காதல்' பட பாணியில் லிப்டில் லிப்கிஸ் கொடுத்த காதலர்கள்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

'பியார் பிரேமா காதல்' படத்தில் லிப்டில் செல்லும்போது ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் மாறி மாறி லிப்கிஸ் கொடுக்கும் காட்சி உள்ளது. லிப்ட்டை மேலேயும் கிழேயும் இறக்கி முத்தமழை பொழியும் இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள லிப்ட்டில் ஒரு காதல் ஜோடி லிப்ட்டில் லிப்கிஸ் கொடுத்த காட்சி சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது. லிப்ட்டில் சிசிடிவி இருப்பதை அறியாத ஒரு காதல் ஜோடி, லிப்ட்டை மேலேயும் கீழேயும் இயக்கி லிப்கிஸ் கொடுத்த காட்சி தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதே போன்று ஒரே நாளில் மூன்று ஜோடிகள் முத்தமிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை செய்து வரும் போலீசார் விரைவில் அந்த காதல் ஜோடிகளை கண்டுபிடித்து அவர்கள் மிது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவை எப்படி ஆன்லைனில் வைரலானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

சேரனின் 'திருமணம்' சென்சார் தகவல்கள்

பிரபல இயக்குனர் சேரன் 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'திருமணம்'

காதலர் தினத்தில் '96' படக்குழுவினர் தரும் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ போல் எப்போதாவது மறக்க முடியாத திரைப்படங்கள் வருவதுண்டு. அந்த வகையில் 'ஆட்டோகிராப்' படத்திற்கு பின் படம் பார்த்த அனைவரின் பள்ளிக்கால மலரும் நினைவுகளை தட்டியெழுப்பி

பிரபல நடிகரின் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து படங்கள் வெளியான போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது.

அஜித் எடுத்த தெளிவான முடிவு: சரத்குமார் பாராட்டு

சமீபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தவுடன் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அஜித் ரசிகர்களும், அஜித்தும் தமிழகத்தில் தாமரை மலர உதவ வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தார்

மகள் செளந்தர்யாவுக்காக ரஜினி-லதா கொடுத்த விதைப்பரிசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா-விசாகன் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.